கூண்டிற்குள் சிறைபட்ட திருவள்ளுவர்..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (16:50 IST)
தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில் அந்த திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவள்ளுவர்  காவி அங்கி, நெற்றியில் திருநீறு ஆகியவற்றை அணிந்திருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியானது. அதன் பின்பு தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பின்பு அந்த சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவி உடை அணிந்து ருத்ராட்ச மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்