தமிழ்நாட்டில் ’ஐபோன் 15’ உற்பத்தி தொடக்கம்! ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (11:57 IST)
ஐபோன் 15 மாடல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் இந்த போன்கள் தற்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஐபோன் 15 மாடல் தயாரிப்பு பணிகள் தொடங்கியதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  
 
ஐபோன் 15 மாடல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் நிலையில் இந்த ஐபோன் தான் உலகம் முழுவதும் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஏற்கனவே இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது ஃபாக்ஸ்கான் நிறுவனமும் ஐபோன் 15 மாடல் தயாரிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்