ஃபாக்ஸ்கான் தமிழகத்தில் முதலீடு செய்யாதது ஏன்? அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:46 IST)
தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1600 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக முதலமைச்சர் தனது ட்விட்டரில் அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் ஃபாக்ஸ்கான்  நிறுவனம் அதை மறுத்தது. 
 
இது குறித்த கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனத்திடம் 30 சதவீதம் கமிஷன் திமுக அரசு கேட்பதாகவும் அதனால்தான் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் முதலீடு செய்வதை தவிர்ப்பதாகவும் அவர் கூறினார்.. 
 
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய இருப்பதாக கூறிய தொகையிலிருந்து மூன்று மடங்கு தொகையை கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது என்றும் அவர் கூறினார்.  அண்ணாமலையின் இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்