அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..!

Siva

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:36 IST)
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் இன்று காலை 10 மணி வரை தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு வேலைகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


ALSO READ: திடீரென டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி: பிரதமருடன் முக்கிய ஆலோசனையா?

Edited by Siva
 

pic.twitter.com/2NvSq4E0kc

— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 20, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்