தமிழக மருத்துவ மாணவன் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் சேர்ந்தவர் சரவணன். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த அவர் கடந்த 10ம் தேதி சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்தார். இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உடலில் நச்சுப்பொருள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அது சில மாதங்களுக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார். எப்படி இருப்பினும், அறிக்கை குறித்து காவல்துறையினருடன் ஆலோசித்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவணின் பெறோரும் உறவினர்களும் வலியுறுத்தி உள்ளனர்.