ரெண்டு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! சீமானை விசாரிக்க இடைக்கால தடை! - உச்சநீதிமன்றம் உத்தரவு!

Prasanth Karthick

திங்கள், 3 மார்ச் 2025 (12:38 IST)

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் மீது விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்ந்த நிலையில் அதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரி சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

 

அதற்குள்ளாக சீமான் வீட்டில் போலீஸார் ஆஜராக சொல்லி சம்மன் ஒட்டியதும், அதை நாதகவினர் கிழித்ததும் என களேபரமான சூழல் எழுந்தது. இதற்கிடையே சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணையில் பதில் அளித்தார்.

 

இந்நிலையில் சீமான் கோரிய இடைக்கால தடையை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகை விஜயலெட்சுமி தொடுத்த பாலியல் வழக்கில் 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இரு தரப்பிலும் பேசி சுமூகமான முடிவை காணவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்