பேரிடர் மையம், மீன்பிடி இறங்கு தளம் etc.,!? நாகை மக்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்கிய முதல்வர்!

Prasanth Karthick

திங்கள், 3 மார்ச் 2025 (13:00 IST)

இன்று நாகப்பட்டிணம் சென்று மக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்கள் நன்மை பெறும் அளவில் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.

 

நாகப்பட்டிணம் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்

 

நாகை மாவட்டத்தில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் அமைக்கப்படும்.

 

நாகை விழுந்தமாவடி மற்றும் வானமாமகாதேவி பகுதிகளில் ரூ.12 கோடி செலவில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மீன்பிடி இறங்குதளம் அமைத்து தரப்படும்

 

வேதாரண்யம் மாவட்டம் தலைஞாயிறில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

 

வடிகால் மற்றும் வாய்கால் மதகுகள் மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

பழமை வாய்ந்த நாகப்பட்டிணம் நகராட்சி கட்டிடமானது ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது,.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்