முடக்கவேண்டியது இணையத்தை அல்ல, ஆட்சியைத்தான் - பிரேமலதா ஆவேசம்

Webdunia
வியாழன், 24 மே 2018 (09:50 IST)
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,  முடக்கவேண்டியது இணையத்தை அல்ல, தமிழக அரசை தான் என பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார்.
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் காரர்களின் இந்த அட்டூழியத்திற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டம் தொடர்பாக இணையதளங்களில் வதந்திகளை பரப்பப்படுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டகளின் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது
 
தூத்துக்குடி கலவரத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்றுவரும் தூத்துக்குடி பொதுமக்களை இன்று காண உள்ள விஜயகாந்த் மனைவி, பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது தூத்துக்குடியில் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த மிருகத்தனமான செயலுக்கு காரணம் யார் என கேள்வி எழுப்பினார்.
 
மேலும் முடக்கப்படவேண்டியது இணைய சேவையை அல்ல, மாற்ற வேண்டியது கலெக்டரையும், எஸ்பிஐயும் அல்ல, மாற்ற வேண்டியது எல்லாம் ஒன்றே தான், அது இந்த அதிமுக அரசை தான் என பிரேமலதா ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்