தமிழகத்தில் காவிக்கொடி தான் பறக்கிறது - வைகோவுக்கு தமிழிசை பதிலடி

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:05 IST)
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். பாஜக வரும் தேர்தலில் அதிக இடங்களை  பிடிக்கும் என்று  மேடையில் முழங்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 

இன்று ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
மக்களின் வளர்ச்சிக்காக நல்ல திட்டங்களை செயல்படுத்த தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு கருப்புக் கொடி காட்டுவதாகும்.அதனால் வைகோவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.வைகோ காட்டிய கருப்புக்கொடி கிழிறங்கி தற்போது காவிக்கொடிதான் உயரே  பறந்து கொண்டிருக்கிறது.
 
ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியும் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுவதால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்