தமிழக அரசின் தடை முயற்சி – பதிலளித்த டிக்டாக் நிறுவனம் !

வியாழன், 14 பிப்ரவரி 2019 (15:24 IST)
ஆபாசங்களை இளைஞர்கள் மனதில் விதைப்பதாகக் கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 12ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எம்.மணிகண்டன் சமூக வலைதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயலியான டிக் டாக்கைத் தடை செய்ய மத்திய அரசின் உதவியை நாட இருப்பதாகத் தெரிவித்தார். இதற்குக் காரணமாக அவர் சொன்னது டிக்டாக், கலாச்சாரத்தை சீர்குலைப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டிக்டாக் வீடியோக்களில் பெரும்பகுதி ஆபாசமானவையாக இருக்கின்றன. இதனால் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் இதற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் எழுந்தன. இப்போது தமிழக அரசின் இந்த முடிவு குறித்து சம்மந்தப்பட்ட டிக்டாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில் ‘விதிமுறைகளைக் கடைபிடிக்காத வீடியோக்கள் மீது சட்டரீதியாக புகார் அளிக்கும் வசதி எங்களிடம் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். மேலும் திறம்பட செயல்படுவதற்காகவும் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் உரையாடுவதற்காகவும் தலைமை அதிகாரி ஒருவரை விரைவில் நியமிக்க இருக்கிறோம்.’ எனப் பதில் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்