அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (21:05 IST)

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் ஓரிடு இடங்களில் இடியுடன் கூடிய மழை  பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

தென் மேற்கு வங்கக் கடல் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால்  இன்று மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். நாளை மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெரும் என தெரிவித்துள்ளார்.ல்

மேலும்,  இது 17 ஆம் தேதி வடமேற்குக் திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.  அதனால் வரும் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75 முதல் 85 கிமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள், லட்சத்தீவு பகுதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு மீன் பிடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்