தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி, 20 ஜூலை 2019 (19:12 IST)
தமிழகத்தின் கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் மித கனமழை செய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
 
மேலும், குமரி நெல்லை தேனி திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்புள்ளதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துட இருக்கு என்றும்,ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு எனவும், மாலத்தீவு, மன்னார் வளைகுடா ,குமரிக்கடல், தெற்குவங்கக்கடலில் சீற்றம் காணப்படுவதால் அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்