பட்டா பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (07:32 IST)
அரசின் சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதன் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 
 
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் சந்திக்கும் பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
அதன்படி, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் சிறப்பு முகாம்கள் என தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வருவாய் வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பட்டாவில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் எனவும் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கான ஏற்பாடு செய்வதோடு அதனை கண்காணிக்கும் பணியிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்