தமிழகம் எங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமம் சுமார் 350 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டவர் ஜேப்பியார். அவரது ஆட்சியின் போது கல்வி நிறுவனங்களை தொடங்கினார். இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியா குழுமம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர் கல்லூரி, பனிமலர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.3 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இப்போது சுமார் 350 கோடி ரூபாய் பணத்தை கணக்கில் அந்நிறுவனம் மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.