கள்ளத்தொடர்பு...மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன் கைது!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (18:56 IST)
பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது பற்றி மனைவிக்கு தெரிந்ததா அவரைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்.  இவருக்கு திருமணத்திற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் திருமணம் ஆன பிறகும் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார் வினோத். இதுகுறித்த அறிந்த தனது மனைவி ஹேமாவதியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அவர் மயக்கம் வந்து கீழே விழுந்துவிட்டதாகக் கூறி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ஹேமாவதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 இதுகுறித்து போலீசார் வினோத்குமாரிடம் விசாரணை செய்தனர். அதில், மனைவியைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்