லிவர்பூல் நகரில் கார் வெடிப்பு: தீவிரவாத சட்டத்தின் கீழ் 3 பேர் கைது

திங்கள், 15 நவம்பர் 2021 (11:21 IST)
நேற்று (நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை) லிவர்பூல் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே ஒரு டாக்ஸி வாகனம் வெடித்ததில் ஒரு பயணி பலியானார்.

தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை இந்த கார் வெடிப்பு தொடர்பாக 29, 26 மற்றும் 21 வயதுடைய மூன்று பேர் கென்சிங்டன் பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தாக்குதலில் ஒரு பயணி இறந்துவிட்டதாகவும், அவர் யார் என்கிற விவரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த டாக்ஸி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கார் வெடிப்பு தொடர்பாக மெர்செசைட் (Merseyside) காவல் துறை உடன் தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை இணைந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர். அதே போல இந்த விவகாரம் தொடர்பாக எம் ஐ 5 அமைப்பும் உதவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்