காதலியைக் கரம்பிடித்தார் ‘டிமாண்டி காலணி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து!

vinoth

திங்கள், 20 ஜனவரி 2025 (09:59 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான ‘டிமாண்டி காலணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அஜய் ஞானமுத்து. அதன் பின்னர் அவர் இயக்கிய இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

இதையடுத்து அவர் மீண்டும் தன்னுடைய ஹிட் படமான ‘டிமாண்டி காலணி’யின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து ‘டிமாண்டி காலணி 3’ மற்றும் விஷாலை வைத்து ஒரு படம் ஆகியவற்றை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரின் திருமண நிகழ்வில் விக்ரம் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்