‘பாரதியைப் படித்தால் உயர்வு.... பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் தகவல்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (22:59 IST)
‘பாரதியைப் பின்பற்றினால் மாணவர்களுக்கு உயர்வு வரும்’ என்றார் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு. பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி ‘இளைய பாரதத்தினாய் வா வா வா’ என்ற தலைப்பில் மாணவ, மாணவியருக்கான சுய முன்னேற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கம் இன்று பரணி பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது. 
      
இவ்விழாவிற்கு பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் s.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்டத் துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரெங்கன், M.சுபாஷினி முன்னிலை வகித்தனர். 
    
இவ்விழாவில் இந்திய இராணுவ மேஜர் ஜெனரல்(ஓய்வு) என்.ஆர்.கே.பாபு சிறப்புரையாற்றுகையில், 
“பாரதியின் வரிகள் தன்னம்பிக்கை, தேசப்பக்தியூட்டக்கூடியவை. சோர்ந்து கிடக்கும் எவரையும் உற்சாகப்படுத்தி உயர்வு தரும். மேலும் கடின உழைப்பு, உண்மை, விசுவாசம், நேர்மை, வாழ்க்கைத்திறன்கள் ஆகியவற்றை மாணவப்பருவத்தில் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்பண்புகளும் நற்சிந்தனைகளும் கூடிய பாரதி கண்ட இளைய  பாரதத்தினராய் ஒவ்வொருவரும் திகழ்ந்து தன்னையும் தாய் நாட்டையும் தரணியில் உயர்த்த வேண்டும். இராணுவத்தில் உயர் பதவியில் சேர விரும்பும் தமிழக மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலும் பயிற்சியும் வழங்கப்படும்” என்று கூறினார். 
         
தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், “பாரதியாரின் தேசப்பற்று குறித்தும், அவருடைய  எழுச்சிமிக்க தமிழ்ப்  பாடல்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் எழுச்சிமிகு பாரதியை போல தாய்த்திருநாட்டை நேசிப்பவராகவும், போற்றுபவராகவும் அவரவர்க்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அத்துறையில் தாய்நாடு பெருமை கொள்ளும் வகையில் நன்கு படித்து சிறப்புற வேண்டும்” என்று கூறினார். 
  
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பாரதியின் முகமூடி வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் பாரதியைப் போன்று நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்று   பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் s.சுதாதேவி, பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் R.பிரியா  மற்றும் இருபால் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் மாணவ, மாணவிகளிடையே பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 
புகைப்படம்:  பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா சுய முன்னேற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கில் சிறப்புரையாற்றி பாரதியார் முகமூடி வழங்குகிறார் ஓய்வு பெற்ற இந்திய .இராணுவ மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு அருகில் பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் s.மோகனரெங்கன், பரணி பார்க் சாரணர் மாவட்டத் துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரெங்கன், M.சுபாஷினி, தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் s.சுதாதேவி, பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் R.பிரியா.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்