தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் ஹெச் வினோத்… முதல் படம் பற்றிய தகவல்!

புதன், 14 டிசம்பர் 2022 (08:20 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இப்போது துணிவு படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் அவர் இயக்கும் படத்தை அவரே தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்