’பிக்பாஸ்’ தேவையில்லை என்றால் ’அரசும் ’ தேவையில்லை - நடிகர் கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (21:31 IST)
தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறேன் என நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், பிரபல தனியார் சேனல் ஒன்றின் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து சில வருடங்களாக வழங்கி வருகிறார்.இந்த நிகழ்சிக்கு பல்கோடி ரசிகர்கள் தமிழகம் எங்கும் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்குது பற்றியும் - இந்த நிகழ்ச்சியை  பற்றியும் அதிமுக அமைச்சர்கள் சில விமர்சனங்களைத் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது : தமிழக ஆட்சியாளர்களை நான் வியாபாரிகளாகத் தான் பார்க்கிறேன். பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் அரசும் அப்படித்தான்  என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்