தற்போது அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடப்பதால், அதிலும் கோஷ்டி பூசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஓ.பி.எஸ் அணி, முதல்வர் எடப்பாடி அணி என இரு அணிகள் இருந்த நிலையில், ஒருபக்கம் தினகரன் தனக்கென ஒரு அணியை உருவாக்கினார். தற்போது அவரது அணியில் இருக்கும் 35 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதில், எம்.எல்.ஏ அரி என்பவர் தினகரன் கட்சியிலிருந்து விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேள் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “எல்லோரும் சேர்ந்துதான் சசிகலாவை பொதுச்செயலாளராகவும், தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுத்தனர். இப்போது அவர்களுக்கு எதிராக பேசுகிறார்கள். கூவத்தூரில் 2 நாட்கள் சசிகலா இல்லையெனில் இந்த ஆட்சியே இல்லை. கட்சி நடுரோட்டிற்கு வந்திருக்கும். எனவே, எடப்பாடி பழனிச்சாமி நரசிம்மராவ் போல் மௌனம் காக்கக் கூடாது. இதற்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அவர் கூறினார்.