சிங்கிள் லேடிக்கு ரூம் கிடையாது: இளம்பெண்ணை விரட்டியடித்த ஐதராபாத் ஓட்டல்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (06:11 IST)
இன்றைய காலத்தில் இளம்பெண்கள் உலகம் முழுவதும் தங்களுடைய பணிநிமித்தம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் தனியாக தங்குவதற்கு உலகின் அனைத்து நாடுகளிலும் அறை வழங்கப்பட்டுத்தான் வருகிறது.



 


இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இளம்பெண்கள் தனியாக தங்க அறைகள் வழங்கப்படுவதில்லை என்று கூறியுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த நூபுர் சரஸ்வத் என்ற இளம்பெண், தன்னுடைய பணி நிமித்தமாக ஐதராபத்திற்கு வந்துள்ளார். இதிலும் அவர் ஏற்கனவே ஆன்லைனில் அறை புக் செய்துள்ளார். ஆனால் ஓட்டலுக்கு வந்ததும் அவர் சிங்கிள் லேடி என்பதால் அறை தர ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து நூபுர் தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டபோது, 'நான் லக்கேஜ்களுடன் நடுத்தெருவில் நின்றேன். இரக்கமே இல்லாமல் இரவு 11 மணிக்கு எனக்கு ரூம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டனர். காரணம் கேட்டால் உங்களுடைய பாதுகாப்புக்குத்தான் ரூம் இல்லை என்று கூறினோம் என்று கூறுகின்றார்கள்

அவர்களுடைய ஓட்டல் அறையில் தங்குவதைவிட நடுத்தெருவில் தங்குவது பாதுகாப்பு என்று இவர்கள் கூறுகின்றார்களா? என்று அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்