காலையில் இருந்து டுவிட்டர் டிரெண்டில் உள்ள 'இடுப்புகிள்ளி திமுக'

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (17:27 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று திமுக சார்பில் பந்த் மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பந்த் 100% வெற்றி என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் மாலையில் அறிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று மாலைவரை டுவிட்டர் டிரெண்டில் தமிழ்நாடு பந்த் என்ற ஹேஷ்டேக் இருந்தது என்பதும் ஒரு பெருமைக்குரிய விஷயம்

இந்த நிலையில் இன்று காலை முதல் தற்போது வரை டுவிட்டரில் 'இடுப்புகிள்ளி திமுக என்ற தமிழ் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட்ங்கில் உள்ளது. நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட கரூரை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரின் இடுப்பை திமுக நிர்வாகி ஒருவரே கிள்ளிவிட்டதாக புகார் கூறினார். அதுமட்டுமின்றி அந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தர்ணா போராட்டத்திலும் அந்த பெண் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் வெற்றிகரமாக நேற்று பந்த் நடத்திய திமுக, அதே டுவிட்டரில் இன்று மானம் காற்றில் பறப்பது கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த விஷயம் நெட்டிசன்கள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர் கையில் சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறது என்பதும் திமுகவினர்களுக்கு ஒரு சோக செய்தி

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்