ஸ்ருதி ஹாசனுக்கு இவ்வளவு ரசிகர்களா? ஷாக்கான முன்னணி நடிகைகள்
திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:33 IST)
டுவிட்டரில் அதிக ஃபாளோயர்களை பெற்று தென்னிந்திய நடிகைகளில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ஆம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பின் முன்னணி நடிகையாக மாறினார்.
அதன்பின் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க தொடங்கினார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமா நடிகைகளில் முதலிடம் பிடித்துள்ளார்.
டுவிட்டரில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதுவரை தென்னிந்திய நடிகைகள் யாரும் இவரை போல பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பெறவில்லை.