டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக் கடைகள்! – டெண்டரை பிடித்த ஐசிஐசிஐ!

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:35 IST)
தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு சாதனங்கள் பொருத்துவதற்கான டெண்டரில் ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது, அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான தொழில்நுட்ப வசதிகள் செய்தல், சரக்கு இருப்பை தெரிந்து கொள்ளும் வகையில் டேட்டாக்களை கணினிமயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை எந்திரங்களை அமைப்பதற்கு வங்கிகளிடம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. 7 வங்கிகள் கலந்து கொண்ட நிலையில் குறைவான ஒப்பந்த புள்ளிகளை அளித்து மின்னணு விற்பனை இயந்திரங்கள் அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதற்கான தொகையை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். மெலும் யுபிஐ, போன் பே, கூகிள் பே, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் உள்ளிட்ட சகல ஆன்லைன் வழி பரிவர்த்தனை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும், இவற்றை கையாள டாஸ்மாக் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்