விஜயகாந்தை சிங்கம் போல் பேச வைத்தவன் நான்: லியாகத் அலிகான்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (16:06 IST)
விஜயகாந்துக்கு பல படங்களில் வசனம் எழுதி சிங்கம் போல பேச வைத்தவன் நான், ஆனால் இன்று அசிங்கமாக பேசி வருகிறார் என்று கூறியுள்ளார்.


 

ராமநாதபுரம் சின்னக்கடையில் அதிமுக வேட்பாளர் மணிகண்டனை ஆதரித்து லியாகத் அலிகான் பிரச்சாரம் செய்தார். பிரச்சார்த்தில் லியாகத் விஜயகாந்தை மிகவும் மோசமாக கிண்டலடித்து பேசினார்.

தொடர்ந்து விஜயகாந்தை தாக்கி பேசிய லியாகத் கூறியபோது,

நான் 30 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறேன், இதுவரை 2 படங்கள் வீணாய் போன விஜயகாந்தை வைத்து இயக்கியுள்ளேன், பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளேன். அதில் விஜயகாந்தை சிங்கம் போல பேச வைத்தவன் நான், ஆனால் இன்று வைகோவுடன் சேர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார் என்று லியாகத் பேசினார்.

மேலும் லியாகத், தமிழகத்தில் அம்மா உணவகத்தை திறந்து பசிப்பிணி போக்கியவர் முதல்வர் என்றும், கருணாநிதியால் இருண்ட மாநிலமான தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர் முதல்வர் என்றும் பேசினார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

 
அடுத்த கட்டுரையில்