நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

Mahendran
திங்கள், 16 டிசம்பர் 2024 (17:14 IST)
இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அவமரியாதை செய்யப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல என்றும் தன்னை பற்றிய தவறான செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்த ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் சென்றார்.” என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்