ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் சென்ற இளையராஜா தடுத்து நிறுத்தம்!

vinoth

திங்கள், 16 டிசம்பர் 2024 (07:53 IST)
தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாத இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். ஆனால் அதேசமயம் அடிக்கடி இளையராஜா பேசும் விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. சமீபமாக இளையராஜா ராயல்டி தொடர்பாக வழக்குத் தொடர்ந்ததும், பாடலில் பாடல் வரிகளை விட இசைக்குதான் முக்கியத்துவம் எனப் பேசிவருவருவதும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதனால் சோசியல் மீடியாக்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமான வாக்குவாதங்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தன்னுடைய முதல் சிம்பொனியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள ஆடிட்டோரியம் ஒன்றில் இளையராஜா நடத்தவுள்ளார்.

இந்நிலையில் தற்போது இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு அவர் சென்றபோது கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தில் அவர் நுழைந்தபோது அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் அந்த மண்டபத்தின் படியருகே நின்று கொண்டே அவர் கோயில் மரியாதையைப் பெற்றுக்கொண்டுள்ளார். உலகளவில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த ஒரு இசைஞானியை, தீவிர கடவுள் பக்தரை இவ்விதமாக அவமானப்படுத்தியது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்