நெல்லை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில், திடீரென ஒருவர் போன் செய்து கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
மோப்பநாய் மூலம் சோதனை செய்த நிலையில் எந்த ஆபத்தான பொருளும் சிக்கவில்லை என்பதால் வழக்கம் போல் மிரட்டல் அழைப்பு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, மிரட்டல் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில் அதே பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை கண்டுபிடித்தார்.
இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாயை கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது பொங்கல் பரிசு தொகை ரூ.1000 இல்லை ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.