எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தால், எந்தவித நிபந்தனையும் இன்றி அ.தி.மு.க.வில் இணைவேன். எனக்கு எந்தவிதமான பதவியும் அ.தி.மு.க.வில் தேவையில்லை" என்றும், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாகவும், அப்போது எதிர்கால திட்டங்களைக் கூறுவேன் என்றும் இன்று காலை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ்., "அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். எடப்பாடி பழனிசாமி மட்டும் ஒப்புக்கொண்டால், எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அ.தி.மு.க.வில் இணையத் தயார். எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் பதவி கொடுத்தால் போதும்" என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., "விஜய்யின் அரசியல் நகர்வுகள் நன்றாக இருக்கிறது. வருங்காலங்களில் அவரது அரசியல் முடிவுகள் ஜனநாயக ரீதியில் இருக்கிறதா என்பதை பார்த்துதான் அவருக்கு எங்களுடைய ஆதரவு வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.