சிகரெட் வார்னிங் போல் ஜிலேபி, பகோடாவுக்கும் வார்னிங்.. மத்திய அரசு அதிரடி முடிவு..!

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (16:44 IST)
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை செய்தி கொடுப்பது போல், ஜிலேபி, பக்கோடா போன்ற சிற்றுண்டிகளுக்கு சுகாதார எச்சரிக்கை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கேண்டீனில் முதல் கட்டமாக இந்த எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு, இரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், 2050 ஆம் ஆண்டுக்குள் 44 கோடி இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமன் கொண்டவர்களாக இருக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, பிரபலமான உணவு கடைகளில் சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் குறித்த எச்சரிக்கை பலகை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கை போலவே இந்த எச்சரிக்கை இருக்கும் என்றாலும், இந்த உணவுகளுக்கு தடை கிடையாது என்றும், அதே நேரத்தில் சமோசா, ஜிலேபி, பக்கோடா ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த எச்சரிக்கை பலகை திட்டம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்