ரஜினி கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: வைகோ

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (20:35 IST)
காஷ்மீர் பிரச்சனை குறித்து ரஜினி தெரிவித்த கருத்தையும், மோடி-அமித்ஷா ஆகிய இருவரையும் கிருஷ்ணர்-அர்ஜுனர் ஆகியோர்களுக்கு ஒப்பிட்டதையும் முக ஸ்டாலின், ப.சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதிகாத்து வரும் நிலையில் ஒருசில அரசியல்வாதிகள் இதனை அரசியலாக்கும் வகையில் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
 
இதற்கு இன்று பதிலளித்த ரஜினிகாந்த், 'எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று ஆதங்கத்துடன் பதிலளித்தார். மேலும் மோடி, அமித்ஷாவின் ராஜதந்திரத்தை குறிப்பிடவே கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன் என்று கூறினார்.
 
 
இந்த நிலையில் புத்தக விழாவில் ரஜினி பேசியது குறித்தும், அது சர்ச்சைக்குள்ளான பின்னர் ரஜினி அளித்த விளக்கம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியபோது, 'காஷ்மீர் பிரச்னையை அரசியலாக்குகின்றனர் என்ற ரஜினி கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் காஷ்மீர் பிரச்னை குளவிக் கூட்டை கலைத்து விட்டது போன்றது என்பதும் சர்வதேச பிரச்னை ஆகிவிட்டது என்பதும் நிச்சயமான உண்மை' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்