காஷ்மீர் பேச்சின் எதிரொலியா? அரசு விருதை ஏன் புறக்கணித்தார் விஜய் சேதுபதி??

புதன், 14 ஆகஸ்ட் 2019 (12:43 IST)
காஷ்மீர் விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு ஆளும் கட்சியினரும் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்ததால் அரசு விருதை புறக்கணித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
தமிழக அரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 
 
2011 முதல் 2018 வரையிலான 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் வழங்கப்பட்டது. மொத்தம் 201 கலைஞர்கள் விருதுகளை பெற்றனர். 
இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி விருதினை பெற வரவில்லை. மேலும் நடிகர் சந்தானம், பிரபுதேவா, பிரியாமணி, பாடலாசிரியர் யுகபாரதி போன்ற சிலரும் விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை. 
 
ஆனால், விஜய் சேதுபதி இந்த விழாவிற்கு வராமல இருந்ததற்கு பல விதமான காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக இவர் சமீபத்தில் காஷ்மீர் குறித்து பேசியதற்கு ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரும், பாஜக தமிழக தலைவரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 
காஷ்மீர் குறித்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த விஜய் சேதுபதி இப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த அரசிடம் இருந்து விருது வாங்க விரும்பாத அவர் நிகழ்ச்சியை புறக்கணித்தார் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. 
 
உண்மையில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்