நான் மட்டும்தான் கவர்ச்சி காட்டினேனா? : சுயசரிதையில் விலாசிய ஷகிலா

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (15:04 IST)
பெரும்பாலன நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கும் சினிமா உலகில், என்னை மட்டும் ஏன் வேறு மாதிரி பார்க்கிறீர்கள் என்று கவர்ச்சி நடிகை ஷகிலா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
நடிகை ஷகிலா சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில், மலையாள மற்றும் தமிழ் சினிமா உலகில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அதில் பதிவு செய்துள்ளார். 
 
“நான் வேண்டுமென்றே செக்சியாக நடிப்பதாகவும், மீடியாவில் அதிக கவனம் பெற வேண்டும் என்பதற்காகவும் அப்படி நடிக்கிறேன் என்றும் கூறினார்கள். ஆரம்பத்தில் அது எனக்கு வேதனையாக இருந்தது. போகப் போக பழகிவிட்டது. எதற்காக இப்படியெல்லாம் கட்டு கதைகளைப் பரப்புகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
 
பில்லா படத்தில் நயன்தாரா டூ பீஸ் உடையில்  நடித்திருப்பார். ஆனால் யாருக்கும் ஆபாசமாக அது தெரியவில்லை. அதுபோல் மலையாளம், ஹிந்தி என பல நடிகைகளும் கவர்ச்சியான உடைகளில் நடித்துள்ளனர். அது தவறாக தெரியவில்லை. அவர்கள் மேல் எந்த புகாரும் இல்லை. 
 
ஆனால் நடித்தால் மட்டும் செக்சி என்கிறார்கள். என்னை மட்டும் ஏன் அந்த ரகத்தில் சேர்க்கிறார்கள் என்பதற்கு இப்போதும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. நானும் நடிக்கத்தான் செய்கிறேன். கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான உடை அணிந்து நடிக்கிறேன். அது வெறும் நடிப்பு மட்டும்தான். கவர்ச்சி என்பது பார்ப்பவரின் கண்ணில் இருக்கிறது.
 
நான் நடித்த படங்களில் ஒரு எல்லைக்கு மேல் கிளாமர் இருப்பதில்லையே.. பிறகு ஏன் அந்த படங்களை ரசித்து பார்த்து விட்டு, ஷகிலா என்ற பெண்ணை செக்ஸ் நடிகை என்று ஏன் முத்திரை குத்தி வேட்டையாட வேண்டும்?” என்று ஷகிலா கேள்வி எழுப்பியுள்ளர்.
அடுத்த கட்டுரையில்