முஸ்லிம்களுக்கு எதிராக சாத்வி சர்ச்சைப் பேச்சு

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (14:45 IST)
முஸ்லிம்கள் குறித்து பாஜக பெண் துறவி சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சி பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
மத்தியில், பாஜக ஆட்சி அமைந்தது முதல், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் சாத்வி பிராச்சி.
 
இந்த நிலையில், முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்றும், பாகிஸ்தான் ஆதரவாளரான, அமீர்கானின் டங்கல் படத்தை  இந்துக்கள் தோல்வி பெறச் செய்ய வேண்டும் என பாஜகவின் பெண் துறவி சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
அடுத்த கட்டுரையில்