இனி மளிவு விலையில் மளிகை கடைகளில் வைஃபை!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (11:42 IST)
மத்திய டெலிமாட்டிக்ஸ் அமைப்பு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தில்  பொது மக்கள் வை-பை டேட்டா பேக்களை மலிவு விலையில் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
இந்த சேவையை மளிகை கடை உட்பட அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் வழங்க முடியும். இனி குறைந்தபட்சம் ரூ.10 என்ற விலையில் வை-பை டேட்டா பெற முடியும். 
 
மேலும் இந்த சேவையை வழங்க எவ்வித உரிமமும் பெற வேண்டிய அவசியம் இலை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதன் கட்டண வழிமுறைகள் மின்சாதனம் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்