மனைவியுடன் எஸ்.ஐ கள்ளத்தொடர்பு - கலெக்டரிடம் கணவர் புகார்

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (12:31 IST)
தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததோடு, நெருக்கமான புகைப்படத்தை காட்டி மிரட்டும் எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் கணவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த சிவலிங்கம்(34) தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நான் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் 4 ஆண்டுகளுக்கு முன் சின்ன திருப்பதியில் வசித்து வந்தேன். அப்போது எங்கள் வீட்டின் மேல் மாடியில் குடியிருந்த போலீஸ் எஸ்.ஐ விதுன்குமார் எங்களுடன் நட்புடன் பழகினார். அதன்பின் என்  மனைவியுடன் தகாத உறவு வைத்தார். இதை நான் கண்டிக்கவே, என் மனைவியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டி மிரட்டத் தொடங்கினார்.
 
குடும்ப மானம் கருதி நான் அமைதியாக இருந்தேன். எனவே, என் மனைவியுடன் கள்ள உறவை தொடர்ந்து வந்தார். இதைக் கண்டித்தால் சில ரவுடிகளுடன் சேர்ந்து என்னையும், குழந்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்ட தொடங்கினார். எனவே வீட்டை மாற்றினேன். ஆனாலும் என் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி தொடர்ந்து மிரட்டி வருவதோடு, என் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுக்கிறார். 
 
எனவே, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, அவரிடமிருந்து எனது மனைவி மற்றும் குழந்தையை மீட்டுத்தர வேண்டும். மேலும், எனது குடும்பத்தினருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் விதுன் குமாரோ பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்