இன்று மேயர் மறைமுக தேர்தல்: எப்படி நடக்கும் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:09 IST)
மேயர் நகர மன்றத் தேர்தலில் மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ளது இந்த தேர்தல் எப்படி நடைபெறும் என்பதை பார்ப்போம் 
 
இன்று காலை 9 மணிக்கு பதவி ஏற்ற அனைத்து கவுன்சிலர்களும் கூடியவுடன் மேயர் மற்றும் நகர மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் குறித்த அறிவிப்பு வெளியாகும் 
 
இந்தப் பதவிக்காக போட்டியிடுபவர்களின் பெயருடன் கூடிய வாக்கு சீட்டு ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு கவுன்சிலரிடம் கொடுக்கப்படும். அந்த வாக்குச் சீட்டில் தாங்கள் மேயராக விரும்பும் மேயர் வேட்பாளரின் பெயரை எழுதி நகர்ப்புற உள்ளாட்சி ஆணையரின் கையெழுத்தைப் பெற்று வாக்கு பெட்டிகள் போடவேண்டும் 
 
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார் அதன்பின் மேயராக தேர்வு செய்யப்பட்டவர் அந்த நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள்
 
இன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கிய உடன் இந்த தேர்தல் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்