வெள்ளம் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்வர் எடப்பாடி

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (15:42 IST)
ஈரோட்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

 
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.  இதனால் அப்பகுதில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
 
வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது:-
 
தென்மேற்கு பருவமழையால் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் 263 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.  
 
67 நிவாரண முகாம்களில் 2,335க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டு உள்ளன.
 
பருவமழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 50 கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்