தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்: வெளிநடப்பு செய்த பாஜக

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:11 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்: வெளிநடப்பு செய்த பாஜக
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
 
மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாக தமிழக அரசு கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் மீதமுள்ள கட்சிகளுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட விட்டதால் இந்த தீர்மானத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்