கங்கை கொண்ட சோழபுரத்தில் பணி: இந்திய தொல்லியல் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (18:57 IST)
கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்திய தொல்லியல் துறை பணி செய்து வருவதை அடுத்து நீதிமன்றம் கண்டித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
கோவிலில் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டுவதற்கு பாலு என்பவர் தொடர்ந்த வழக்கில் அந்த விதிகளை மீறி இந்திய தொல்லியல் துறையை செயல்படுவதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
மேலும் கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்