நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை நீக்க அறிவுறுத்தல்: அதிர்ச்சி தகவல்..!

ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:23 IST)
நீதிமன்றங்களில் அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படத்தை தவிர அனைத்து படங்களையும் நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்றும் மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதிப்பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்  
 
சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டு உள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்தையும் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்