இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்: முதல்வரிடம் மனு..!

வெள்ளி, 21 ஜூலை 2023 (16:45 IST)
இரவு இரண்டு மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இடம்  திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
சென்னை தலைமை செயலகத்தில் இன்றைய தமிழக முதல்வர் முக ஸ்டாலினை திரைப்பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள்  சந்தித்தனர். 
 
அப்போது அவரிடம் மனு அளித்த நிலையில் அந்த மனுவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தனர். இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார் 
 
மேலும் திரையரங்க டிக்கெட் விலையில் இப்போதைக்கு எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் பதில் அளித்தனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்