இன்று காலை 10 மணிக்குள், தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய புயல் கரையை கடந்தாலும், அதன் தாக்கம் இன்னும் நிலவி வருவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை கவனிக்க முடிகிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட பத்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே, தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட சில பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.