நவம்பர் 3வரை தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (11:16 IST)
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக இருந்த வெப்பம் தணிந்தது மட்டுமின்றி நிலத்தடி நீரின் மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகியுள்ளது.



 
 
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நவம்பர் 3ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்றிரவு சென்னையில் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இன்று அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்