அசானி புயல் அந்தமானுக்கு மட்டுமில்லை, தமிழகத்திற்கும் தான்: வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (14:30 IST)
அசானி புயல் காரணமாக அந்தமான் பகுதியில் பலத்த மழை மற்றும் சூறைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது 
 
மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அசானி புயல் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மார்ச் 22 முதல் 24 வரை தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
செம்மஒஉஅஒ வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகும் என்றும் அதனையடுத்து புயலாக உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்