வங்க கடலில் வடகிழக்கு பருவக்காலத்தை ஒட்டி பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், புயல்களும் ஏற்படுவது வழக்கம். வழக்கமாக பருவமழை பிப்ரவரி முதல் பகுதியில் முடிந்து விடும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அரிதாகவே ஏற்படுவதுண்டு. சமீபத்தில் அவ்வாறாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று தமிழகத்தில் கரை கடந்தது.
இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக 19ம் தேதி வலுபெறும் எனவும், மேலும் அந்தமான் கடல் வழியாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.