சென்னையின் பல இடங்களில் கனமழை.. ஒருமணி நேரத்திற்கும் மேல் பெய்ததால் தேங்கி நிற்கும் நீர்..!

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2023 (18:50 IST)
கடந்த ஒரு மணி நேரமாக சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்து வருவதை அடுத்து சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதும் ஒரு சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளான அடையாறு, மயிலாப்பூர், கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. 
 
இதனால் சாலைகளை தண்ணீர்  தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்