ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

வியாழன், 9 நவம்பர் 2023 (16:35 IST)
தமிழக அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்றிய நிலையில் அந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் சட்டம் கடந்த மார்ச் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் கவர்னர் அதற்கு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தமிழக அரசு இந்த சட்டத்தை அரசாணையாக வெளியிட்டது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் அதில்  ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்தது செல்லும் என்று  உத்தரவிட்டது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்