தற்கொலை செய்ய முயன்ற சென்னை இளைஞரை காப்பாற்றிய இண்டர்போல்.. ஆச்சரிய தகவல்..!

வியாழன், 9 நவம்பர் 2023 (13:10 IST)
தற்கொலை செய்ய முயன்ற சென்னை இளைஞரை இன்டர்போல் மிகவும் புத்திசாலித்தனமாக காப்பாற்றிய ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் செயலி மூலம் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ஐடியா கேட்டுள்ளார். உடனடியாக அந்த செயலியை சேர்ந்த நிர்வாகம் அமெரிக்காவில் உள்ள இன்டர்போலுக்கு தகவல் அளித்தது.  இண்டர்போல் உடனடியாக  அவரது ஐ பி முகவரியை கண்டுபிடித்து சென்னையில் இருந்து தான் இந்த தகவல் வந்துள்ளது என்பதை அடுத்து உடனடியாக சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினரை தொடர்பு கொண்டது.

சென்னை காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு ஐபி முகவரி மற்றும் அவர் பயன்படுத்திய இணையதள சேவை நிறுவன உதவியுடன் இளைஞர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பிறகு அவரை மனநல ஆலோசக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அந்த இளைஞர் தனக்கு தலைமுடி கொட்டியதால் நண்பர்கள் கேலி செய்வதாகவும் அதனால் தற்கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து மனநல ஆலோசகர்கள் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் அமெரிக்க செய;ஒ நிர்வாகம், இன்டர்போல் மற்றும் சென்னை  போலீஸ் ஆகியோர்கள் நடவடிக்கை காரணமாக ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்